Type to search

‘என்னை சீண்ட வேண்டாம், பொறுமை காக்கமாட்டேன்” : மனோவுக்கு சிவாஜி எச்சரிக்கை (video)

Hot News NEWS

‘என்னை சீண்ட வேண்டாம், பொறுமை காக்கமாட்டேன்” : மனோவுக்கு சிவாஜி எச்சரிக்கை (video)

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

(M. K. Shivajilingam challenges mano ganesan)
உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் , அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன் என வடமாகாண சபை உறுப்பினர் – எம். கே. சிவாஜிலிங்கம் அமைச்சர் மனோ கணேசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள். ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகனேசன் , வேலணை வேணியன் எங்கே ?

என் கருத்திற்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால் , அரசியல் நாகரிகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும் , உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன்.

“ மனோகனேசன் அவர்களே, துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருவீர்களா? நான் ரெடி நீங்கள் ரெடியா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அரசியல் நாகரீகம் தெரியாமல் அமைச்சர் மனோ கணேசன் பேசுவாராக இருந்தால், மனோ கணேசன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்? கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்கவுக்கும் அமைச்சருக்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் நானும் பேசுவேன் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனை அரசியல் நாகரீகத்திற்குள் நின்று நான் விமர்சிப்பதற்கு காரணம் மலையக மக்கள் மீதுள்ள மரியாதை மட்டுமே. ஆனால் இதற்கு பின்னரும் அமைச்சர் மனோ கணேசன் வரம்பு மீறி பேசுவராக இருந்தால் நாங்களும் வரம்புக்குள் நின்று கொண்டு அரசியல் நாகரீகத்தை பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை.

மனோ கணேசன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்? முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் இருந்திருந்தால் அமைச்சர் மனோ கணேசனுக்கு என்ன கூறியிருப்பார்கள், என்பது பற்றியெல்லாம் நாங்களும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

அதேபோல் விக்கிலிக்ஸ் ஆவணம் இன்றும் உள்ளது. அதில் சம்பந்தன் மற்றும் நான் சர்வதேச நீதி விசாரணை வேண்டும், படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என கேட்டிருப்பது கூறப்பட்டுள்ளது.

அதே விக்கலீக்ஸ் ஆவணத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம் என அமைச்சர் மனோகணேசன் கூறுவதும் உள்ளது. ஆகவே படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் என கேட்பதற்கு துணிவற்ற அமைச்சர் மணோ கணேசன் எங்களை கோமாளி என்பது வேடிக்கை என சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:M. K. Shivajilingam challenges mano ganesan,M. K. Shivajilingam challenges mano ganesan


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: