Type to search

லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்

UK UK Head Line UK Top Story WORLD

லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரித்தானிய இளவரசர் ஹரியை கடந்த மே மாதம் திருமணம் செய்த நாள் முதல் மேகன் மார்க்கல் தனியாக எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. அந்தவகையில், லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரம்பமாகிய ‘ஓஸியானியா’ ஓவியக் கண்காட்சியில் அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்பபடுத்தி மேகன் தனியாக கலந்துகொண்டார். Megan participated Oceania art exhibition London

இராஜரீக கலைக்கழகத்தின் 200க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த கண்காட்சிக்கு மேகன் மார்க்கல் சிறப்பாக வரவேற்கப்பட்டார்.

இந்த ஓவியக் கண்காட்சியில் பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் நகைகள், ஓடங்கள் மற்றும் காட்சிகள் என்பன உள்ளடங்கியிருந்தன. மேகன் அடுத்த மாதம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது ஹரியுடன் இந்த பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெலனேசியா, மைக்ரோனேஷியா, பொலினேசியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள பொருட்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Megan participated Oceania art exhibition London

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •