பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகொள்ள வேண்டும் – அமைச்சர் டொமினிக் ராப்
Share

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், பிரித்தானியாவின் வெளியேற்றத்தை பேச்சுவார்த்தைகளின் ஊடாக சமரசம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டுமென பிரித்தானியாவின் பிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் அழைப்பு விடுத்துள்ளார். EU needs concerned issue Minister Dominic Rob
பர்மிங்ஹாமில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கன்சவேட்டிவ் கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், சிறந்ததொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான நேரம் முடிவடைவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “உடன்பாடற்ற ஒப்பந்தம் தவறானதென கூறுகிறார்கள்.
இந்த அரசாங்கமோ அல்லது இதற்கு பின்னர் ஆட்சிக்கு வரும் வேறு அரசாங்கமோ பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு உட்படுவதன் மூலம், நாட்டின் நலன்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
நாட்டின் ஐக்கியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு உடன்பாடற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரித்தானியாவை வலியுறுத்தும் முயற்சி தொடர்பாக ராப் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.
தாம் தளராத நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள ராப், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா ஒரு விரிவான பாதுகாப்பான ஒப்பந்தத்தை பெறவில்லை என்றும் மாநாட்டின் போது கூறினார்
பிரித்தானியாவை எதிர்மறையான வழியில் ஐரோப்பிய ஒன்றியம் தண்டிக்க விரும்புவதாக தாம் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tags :- EU needs concerned issue Minister Dominic Rob
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பாதுகாப்பு சிக்கல்: இங்கிலாந்து அமைச்சர்கள் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை
- மார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்திய இளவரசி மேகனின் செயல்
- லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்
- லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்
- பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்
தொடர்புடைய ஏனைய தளங்கள்
**********************************************
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com